பாஜக வேட்பாளர் அண்ணாமலைக்கு கொரோனா! – மருத்துவமனையில் அனுமதி!
ஞாயிறு, 11 ஏப்ரல் 2021 (09:06 IST)
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ள நிலையில் பாஜக வேட்பாளர் அண்ணாமலை கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார்.
தமிழக சட்டமன்ற தேர்தல் நடந்து முடிந்துள்ள நிலையில் தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்கள் தொடர்ந்து கொரோனாவால் பாதிக்கப்படுவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தேர்தலுக்கு முன்னதாகவே பல வேட்பாளர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர்.
இந்நிலையில் தற்போது பாஜக சார்பில் அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்ட வேட்பாளர் அண்ணாமலைக்கும் கொரோனா உறுதியாகியுள்ளது. இதனால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அவர் இதுகுறித்து தனது ட்விட்டர் வாயிலாக தகவல் தெரிவித்துள்ளார்.