இந்நிலையில் மக்கள் பலர் அவசர பயணங்களுக்காக இ-பாஸ் விண்ணப்பித்தும் கிடைக்காததால் அவதிக்கு உள்ளாகியுள்ளனர். மறுபுறம் இ-பாஸ் பெற்றுத்தர ஆயிரக்கணக்கில் பணம் வசூல் செய்யும் இடைத்தரகர்கள் எண்ணிக்கையும் கணிசமாக அதிகரித்துள்ளது. இந்நிலையில் இ-பாஸ் பெறுவதற்கான விண்ணப்பத்தை மக்கள் பயன்பாட்டிற்கு ஏற்றவாறு எளிமைப்படுத்தியுள்ளதாகவும், மக்களுக்கு உடனடியாக இ-பாஸ் கிடைப்பதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இந்த இ-பாஸ் பிரச்சினை குறித்து பேசியுள்ள முக ஸ்டாலின் ”தமிழகத்திற்குள் அவசர தேவைகளுக்காக மாவட்டம் விட்டு மாவட்டம் செல்பவர்கள் இ-பாஸ் கிடைக்காமல் அவதிக்கு உள்ளாகும் சூழல் ஏற்பட்டுள்ளது, எனவே மக்களின் கோரிக்கையை ஏற்று அரசு மாவட்டங்களுக்குள்ளாக பயனிப்பதற்கு இ-பாஸ் முறையை ரத்து செய்ய வேண்டும்” என வலியுறுத்தியுள்ளார்.