காவல்நிலையத்தில் திடீர் ஆய்வு மேற்கொண்ட முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்!

வியாழன், 30 செப்டம்பர் 2021 (07:52 IST)
காவல்நிலையத்தில் திடீர் ஆய்வு மேற்கொண்ட முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்!
தமிழக முதலமைச்சராக முக ஸ்டாலின் அவர்கள் கடந்த மே மாதம் பதவியேற்றுக் கொண்டது முதல் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார் என்பதை பார்த்து வருகிறோம். 
 
குறிப்பாக தமிழகத்தின் பல பகுதிகளுக்கு அவரே நேரடியாக சென்று ஆய்வு நடத்தி வருகிறார் என்பதும் அவருடைய நடவடிக்கை ஒவ்வொன்றும் பொதுமக்கள் மத்தியில் பெரும் பாராட்டை பெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இந்த நிலையில் தர்மபுரி மாவட்டத்திற்கு அரசு விழாவில் கலந்து கொள்வதற்காக சென்ற முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்கள் திடீரென அதியமான் கோட்டை காவல் நிலையத்தில் ஆய்வு மேற்கொண்டார். அங்கு உள்ள பைல்களை அவர் பார்வையிட்டு காவல்துறை அதிகாரிகளிடம் குறைகளை கேட்டார் 
 
மேலும் வழக்குகளின் பதிவேடுகள், பொதுமக்களின் புகார்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பது குறித்து காவல்துறை அதிகாரிகளிடம் அவர் விசாரணை செய்தார் காவல் நிலையத்தில் முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்கள் திடீர் ஆய்வு மேற் கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்