பத்திரிக்கையாளர்கள் மீதான வழக்குகள் ரத்து! – முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!
வியாழன், 29 ஜூலை 2021 (17:31 IST)
தமிழகத்தில் பத்திரிக்கையாளர்கள் மீது போடப்பட்ட அவதூறு வழக்குகளை திரும்ப பெற முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
தமிழகத்தில் முதல்வராக மு.க.ஸ்டாலின் பதவியேற்றது முதல் பல்வேறு திட்டங்களை அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார். இந்நிலையில் சமீபத்தில் பத்திரிக்கையாளர்களை கொரோனா முன்கள பணியாளர்களாக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார்.
இந்நிலையில் தற்போது தமிழக அரசு தரப்பில் 90 பத்திரிக்கையாளர்கள் மீது தொடுக்கப்பட்ட அவதூறு வழக்குகளை திரும்ப பெற முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து முன்னதாக அவர் தனது தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.