3 வயது குழந்தைக்கு எலிக்காய்ச்சல் சிகிச்சைக்கு பதிலாக தவறான சிகிச்சை- எடப்பாடி பழனிசாமி

செவ்வாய், 15 ஆகஸ்ட் 2023 (11:56 IST)
சமீபத்தில்,. தவறான சிகிச்சை அளிக்கப்பட்டதால் கை எடுக்கப்பட்டதாக கூறப்பட்ட குழந்தை சென்னை எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் மேல் சிகிச்சை பெற்று வந்த நிலையில் திடீரென உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இந்த நிலையில், கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அரசு மருத்துவமனை கல்லூரி மருத்துவமனையில் 3 வயது ஆண் குழந்தைக்கு எலிக் காய்ச்சல் சிகிச்சைக்கு பதிலாக வெறிநாய் கடிக்கான  சிகிச்சை அளிக்கப்பட்டதாக தகவல் வெளியாகிறது.

இதுகுறித்து, முன்னாள் முதல்வரும், அதிமுக பொதுச்செயலாளருமான எடப்படி பழனிசாமி அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், அரசு மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளின் நோய்த்தன்மை குறித்து பரிசோதிக்காமல் கவனக் குறைவாகக் கையில் கிடைத்த மருந்தை நோயாளிகளுக்குச் செலுத்துவது மிகவும் கொடுமையானது என்று தெரிவித்துள்ளார்.

மேலும், அரசு மருத்துவமனைகளுக்கு வரும் நோயாளிகளுக்கு தக்க சிகிச்சை அளிக்கத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு தமிழக அரசை வலியுறுத்துகிறேன் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்