வெற்றியை தவறவிடும் அமைச்சர்கள் பதவி பறிபோகும் - முதல்வர் ஸ்டாலின் எச்சரிக்கை..!

Senthil Velan

வியாழன், 25 ஜனவரி 2024 (14:31 IST)
மக்களவைத் தேர்தலில் வெற்றியை தவறவிடும் அமைச்சர்களின் பதவி பறிபோகும் என்று முதலமைச்சர் மு.க ஸ்டாலின் எச்சரித்துள்ளார்.
 
நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் வருகிற ஏப்ரல் மாதம் நடைபெறும் நிலையில், தேர்தலுக்கான பணிகளில் அரசியல் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன.  தமிழகத்தில் திமுக, அதிமுக, பாஜக என மும்முனை போட்டி நிலவுகிறது. எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அதிமுக, கூட்டணி தொடர்பாக பல்வேறு கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. 
 
அதேபோல் பாஜகவும் பல்வேறு கட்சிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறது. ஓபிஎஸ், டிடிவி தினகரன், சசிகலா ஆகியோர் பாஜக கூட்டணியில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தேமுதிகவிடமும் பாஜக பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக சொல்லப்படுகிறது. 
 
திமுக தனது கூட்டணி கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறது. இவ்வாறு தமிழக அரசியல் களம் சூடு பிடித்துள்ள நிலையில்,  40 தொகுதிகளிலும் வெற்றி அறுவடை செய்ய வேண்டும் என்றும் கூட்டணி கட்சிகளை ஒருங்கிணைத்து தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்றும் முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார். 

ALSO READ: குத்து சண்டை வீராங்கனை மேரி கோம் ஓய்வு..! வயதுதான் காரணமா?..!
 
மக்களவைத் தேர்தலில் வெற்றியை தவறவிடும் அமைச்சர்களின் பதவி பறிபோகும் என்று முதலமைச்சர் மு.க ஸ்டாலின் எச்சரித்துள்ளார். தாங்கள் பொறுப்பேற்கும் மாவட்டத்தின் வெற்றி தோல்விக்கு அமைச்சர்கள்தான் பொறுப்பு என்று முதல்வர் கூறியுள்ளார். முதல்வரின் இந்த எச்சரிக்கையால் அனைத்து அமைச்சர்களும் கலக்கத்தில் உள்ளனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்