ஜனவரில் 23ல் அமைச்சரவை கூட்டம்.. சட்டப்பேரவை கூட்டம் குறித்து ஆலோசனை..!

Siva

வெள்ளி, 19 ஜனவரி 2024 (12:48 IST)
வரும் பிப்ரவரி மாதம் சட்டப்பேரவை கூட்டம் நடைபெற உள்ளதை அடுத்து ஜனவரி 23ஆம் தேதி அமைச்சரவை கூட்டம் நடைபெறும் என்றும் முதலமைச்சர் மு க ஸ்டாலின் இந்த கூட்டத்திற்கு தலைமை வகிப்பார் என்றும் செய்திகள் வெளியாகி உள்ளன. 
 
ஜனவரி 23ஆம் தேதி காலை 11 மணிக்கு முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் சென்னை தலைமை செயலகத்தில் அமைச்சரவை கூட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
இந்த கூட்டத்தில் பிப்ரவரி மாதம் சட்டப்பேரவை கூட உள்ள நிலையில் அது குறித்து ஆலோசனை செய்யவும் சட்டப்பேரவையில் பட்ஜெட் கூட்டத்தொடரை சமூகமாக நடத்தவும் ஆலோசனை செய்யப்படும் என்று தெரிகிறது. 
 
மேலும் வரும் மார்ச் அல்லது ஏப்ரல் மாதம் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அது குறித்தும் இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 
 
அதுமட்டுமின்றி மேலும் சில முக்கிய விஷயங்கள் இந்த ஆலோசனை கூட்டத்தில் கலந்து ஆலோசனை காட்ட வேண்டும் மெசேஜ்கள் வெளியாகியுள்ளனர்
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்