இந்நிலையில் சில தினங்களுக்கு முன்னர் கூடிய அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி எம்எல்ஏக்களுக்கு சில அறிவுரைகளை வழங்கியதாக தகவல்கள் வருகிறது. அதில் சட்டசபைக்கு வர உள்ள தினகரனிடம் யாரும் பேசக்கூடாது, அவரை பார்த்து சிரிக்க கூடாது என பல கட்டளைகள் பிறப்பிக்கப்பட்டதாக தகவல்கள் வந்தன.
இந்நிலையில் எடப்பாடி பழனிச்சாமிக்கு அதிர்ச்சியளிக்கும் விதமாக இரண்டு எம்எல்ஏக்கள் செயல்பட்டுள்ளனர். சட்டசபையில் தினகரனுக்கு 148-ஆம் எண் இருக்கை ஒதுக்கப்பட்டுள்ளது. அவர் சட்டசபைக்கு வந்ததும், அவரது ஆதரவு எம்எல்ஏக்கள் இரத்தினசபாபதி மற்றும் கலைச்செல்வன் ஆகியோர் அவரை வரவேற்று இருக்கையில் அமர வைத்தனர்.
இவர்கள் இருவரும் ஏற்கனவே வெளிப்படையாக எடப்பாடி அரசு மீது நம்பிக்கை இல்லை என ஆளுநரிடம் கடிதம் அளித்தவர்கள். இருப்பினும் இவர்கள் இருவர் மீதும் சபாநாயகர் தகுதிநீக்க நடவடிக்கை எடுக்கவில்லை. அவர்கள் அதிமுக எம்எல்ஏக்களாக இன்னமும் தொடர்கிறார்கள். இவர்கள் இருவரும் தினகரனை வரவேற்று இருக்கையில் அமர வைத்தது எடப்பாடி பழனிச்சாமிக்கு அதிர்ச்சியளித்துள்ளது.