தமிழகத்தில் திமுக ஆட்சியை பதவி ஏற்றதில் இருந்து பல்வேறு ஆக்கபூர்வமான நடவடிக்கை எடுக்கப்பட்டது என்பதும் குறிப்பாக மகளிருக்கு இலவச பேருந்து, நகை கடன் தள்ளுபடி உள்ளிட்டவை பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது என்பதும் தெரிந்ததே
ஆனால் அதே நேரத்தில் திடீரென சொத்துவரி பலமடங்கு உயர்த்தப்பட்டது பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில் சொத்து வரி உயர்வை அடுத்து பேருந்து கட்டணம் உயர வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்ட நிலையில் இது குறித்து போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ் எஸ் சிவசங்கர் விளக்கமளித்துள்ளார்