100 யூனிட் இலவச மின்சாரம்.. அமைச்சர் செந்தில் பாலாஜி புதிய விளக்கம்!

திங்கள், 28 நவம்பர் 2022 (12:54 IST)
100 யூனிட்டுக்கு குறைவாக பயன்படுத்துபவர்களுக்கு இலவச மின்சாரம் வழங்கப்பட்டு வரும் நிலையில் இது குறித்து அமைச்சர் செந்தில்பாலாஜி விளக்கம் அளித்துள்ளார். 
 
கைத்தறி, விசைத்தறி, 100 யூனிட் இலவச மின்சாரம் என அனைத்திலும் ஏற்கனவே உள்ள நடைமுறை தான் பின்பற்றப்படும் என்றும் அவை நிறுத்தப்பட மாட்டாது என்றும் தெரிவித்துள்ளார் 
 
மேலும் சிறப்பு முகாம்களில் பெயர் மாற்றங்களை மேற்கொள்ளலாம் என்றும் மின் வாரிய அலுவலகங்களில் முதியோர் மாற்றுத் திறனாளிகளுக்கு தனி வரிசை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றும் தெரிவித்துள்ளார்
 
ஒரே ஆதார் எண்ணை எத்தனை மின் இணைப்புகளும் இணைத்துக் கொள்ளலாம் என்றும் ஒருவர் ஐந்து இணைப்புகள் வைத்திருந்தாலும் 100 யூனிட் இலவசம் உண்டு என்றும் அவர் தெரிவித்துள்ளார்
 
ஞாயிற்று கிலமை மற்றும் அரசு விடுமுறை நாட்கள் தவிர அனைத்து நாட்களிலும் சிறப்பு முகாம்கள் நடைபெறும் என்றும் ஆதார் எண்ணை இணைக்க டிசம்பர் 31 வரை கால அவகாசம் அளிக்கப்பட்டு உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார் 
 
தற்போது வரை 15 லட்சம் மின் நுகர்வோர்கள் மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைத்து உள்ளார்கள் என்றும் அவர்
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்