இறைவனிடம் வரம் கேளுங்கள்.. வாக்கு கேட்காதீர்கள்: அமைச்சர் சேகர்பாபு..!

Mahendran

வியாழன், 27 ஜூன் 2024 (12:31 IST)
இறைவனிடம் வரம் மட்டும் கேளுங்கள், இறைவனை வைத்து வாக்குக்கு கேட்காதீர்கள்  என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.
 
இன்று நடந்த நிகழ்ச்சி ஒன்றில் அவர் பேசிய போது ’இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் தான் திருக்கோயில்கள் அதிகம் என்றும் நாம் கோயில்களை வைத்து கலை வளர்த்தோம்,  கலவரத்தை வளர்க்கவில்லை, பண்பாட்டை வளர்த்தோம் பாகுபாட்டை வளர்க்கவில்லை என்று தெரிவித்தார்.
 
எந்த மதமாக இருந்தாலும் அன்பு கொள்வதே இந்து மதம், கடவுளை கோயிலில் வைத்து வணங்கலாம், ஆனால் பிரச்சாரத்துக்கு கடவுளை அழைத்து வராதீர்கள், இறைவனிடம் வரம் கேளுங்கள் இறைவனை வைத்து வாக்கு கேட்காதீர்கள் என்றும் அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார்.
 
உலகுக்கே பொதுமறையும் பொது நீதியும் வழங்கிய அன்னை தமிழ்நாட்டில் ஆன்மீகத்தை அரசியல் ஆக்கும் சூழ்ச்சிகள் தகர்க்கப்படும் என்றும் தெரிவித்தார். அறநிலைத்துறையை இருக்காது என்றவர்களின் எந்த அதிகாரமும் இங்கு செல்லாது என்றும் நதிகள் முன்னே தான் செல்லும், பின் வந்ததில்லை என்றும் அது போல் எங்கள் முதல்வர் லட்சியத்தில் முன்வைத்த காலை பின் வைப்பதில்லை என்றும் அவர் தெரிவித்தார்.
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்