மேலும், விஜய்யின் சுற்றுப்பயணத்தின்போது பொதுச் சொத்துக்கள் சேதப்படுத்தப்பட்டதாகவும், விதிகளை மீறி செயல்பட்டதால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.
விஜய்யின் கூட்டங்களுக்காக ஆம்புலன்ஸ் வாகனங்களுக்குக்கூட வழிவிடவில்லை என்ற குற்றச்சாட்டு குறித்து பேசிய ரகுபதி, "ஒருவருக்கு ஆபத்து என்றால், எந்தப் பகுதியாக இருந்தாலும் ஆம்புலன்ஸ் செல்வதற்கு வழி விடத்தான் வேண்டும். ஆம்புலன்ஸை விட்டு கூட்டத்தை கலைக்க வேண்டிய அவசியம் தி.மு.க.வுக்குக் கிடையாது" என்று கூறினார்.
மேலும், பள்ளிகளுக்கு விடுமுறை நாட்களான சனி, ஞாயிறுகளில் விஜய் பிரச்சாரம் செய்வதாக அவர் விமர்சித்தார். "விஜய் கூட்டங்களுக்குக் கூடும் கூட்டம் அனைத்தும் வாக்குகளாக மாறாது" என்றும் அவர் திட்டவட்டமாக தெரிவித்தார்.