முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர், புதுக்கோட்டையில் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்த பிறகு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், "அடுத்த ஆண்டு அண்ணா பிறந்தநாளின்போது தமிழகத்தில் அ.தி.மு.க. ஆட்சி அமைத்திருக்கும். பல்வேறு சோதனைகளைக் கடந்து சாதனை படைத்திருக்கும் அ.தி.மு.க. மக்களை நேசிக்கும் கட்சி, மக்களும் அ.தி.மு.க.வை நேசிக்கிறார்கள்" என்று தெரிவித்தார்.
எம்.ஜி.ஆர். கூடிய கூட்டத்தை போல விஜய்க்கு கூட்டம் கூடுகிறதே? என்று செய்தியாளர்கள் கேட்டபோது, "எம்.ஜி.ஆரை வேறு யாருடனும் ஒப்பிட வேண்டாம், அவர் ஒரு மகத்தான மனிதர்" என்று விஜயபாஸ்கர் பதிலளித்தார்.
தற்போது தி.மு.க. மீது மக்களுக்கு வெறுப்பு இருக்கிறது என்றும், அதற்கு மாற்றாக அ.தி.மு.க.தான் இருக்கிறது என்றும் அவர் கூறினார். மேலும், எடப்பாடி பழனிசாமி தலைமையில் அ.தி.மு.க. ஆட்சி அமைக்கும் என்றும் உறுதியாகத் தெரிவித்தார்