தமிழ்நாடு அரசுக்கே தெரியாமல் வெளியான அறிவிப்பு: தமிழ் வழிப் பாடப்பிரிவுகள் குறித்து அமைச்சர் பொன்முடி..!

வெள்ளி, 26 மே 2023 (10:55 IST)
அண்ணா பல்கலைக்கழகத்தில் உள்ள உறுப்பு கல்லூரிகளில் தமிழ் வழி பாடப்பிரிவுகள் தற்காலிகமாக நீக்கம் செய்யப்படுவதாக நேற்று அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்தது. 
 
இந்த அறிவிப்புக்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் அன்புமணி உள்ளிட்ட எதிர்க்கட்சி பிரமுகர்கள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் ஒரு சில மணி நேரத்தில் இந்த அறிவிப்பு வாபஸ் பெறப்படுவதாக அறிவிக்கப்பட்டது. 
 
இந்த நிலையில் இது குறித்து உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி விளக்கம் அளித்துள்ளதாவது: தமிழ்நாடு அரசுக்கே தெரியாமல் அண்ணா பல்கலைக்கழகம் இதுபோன்ற அறிவிப்பை வெளியிட்டுள்ளது. பொறியியல் கல்லூரிகளில் தமிழ் வழிப் பாடப்பிரிவுகள் மூடப்படாது!
 
எத்தனை பேர் படிக்கிறார்கள் என்பது முக்கியமல்ல, தாய் மொழியில் படிக்க வேண்டியது முக்கியம். பொறியியல் கல்லூரிகளில் தமிழ் வழி பாடப்பிரிவுகள் மூடப்படாது என அண்ணா பல்கலை. அறிவித்துள்ளது என அமைச்சர் பொன்முடி விளக்கம் அளித்துள்ளார்.
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்