வந்தது கடவுள் என்பதை அறிந்து மகாபலி தன்னுடைய தலையில் பகவானின் மூன்றாவது அடியை வைத்துக்கொள்ளுமாறு சொன்னான், பகவானின் திருவடியை தாங்கும் பெரும்பேறு அவனுக்கு வாய்த்தது. எம்பெருமான மூன்றாவது அடியினை மகாபலியின் தலையில் வைத்து அவரை பாதாள உலகத்திற்கு அனுப்பினார். அப்போது மகாபலி எம்பெருமானிடம் ஒரு வரம் கேட்டார். “வருடம் ஒரு முறை இதே நாளான திருவோணத்தில் நான் இந்த பூமிக்கு வந்து எல்லா மக்களும் மகிழ்ச்சியோடு வாழ்வதை பார்த்து செல்ல வேண்டும் என்னும் வரத்தை கோரினான். ஆதலால்தான் ஆண்டு தோறும் மக்களை காண வரும் இந்த “ஓணம்” நாளை திருவோணம் என்று போற்றி விழாவாக கொண்டாடுகின்றனர்.