பாராட்டு விழாவில் டீலிங் பேசிய அதிமுக மினிஸ்டர்: கவர்னர் தமிழிசை ஷாக்!

செவ்வாய், 8 அக்டோபர் 2019 (13:30 IST)
அதிமுக அமைச்சர் மஃபா பாண்டியராஜன், அரசியல் ரீதியாக தெலங்கானா - தமிழகம் ஓபந்தங்களை ஏற்படுத்தலாம் என தமிழிசையிடம் கோரியுள்ளார். 
 
தமிழக பாஜக தலைவராக இருந்த தமிழிசை கடந்த மாதம் தெலங்கானா ஆளுநராக நியமிக்கப்பட்டார். இந்நிலையில் அகில இந்தியத் தமிழ் சான்றோர் பேரவை சார்பில் சென்னை ஆழ்வார்பேட்டையில், தமிழிசைக்கு பாராட்டு விழா நடந்தது.
 
இந்த விழாவில் அதிமுக அமைச்சர் மாஃபா பாண்டியராஜன், சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் ஆகியோர் கலந்துக்கொண்டார். இந்த விழாவில் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தமிழிசையிடம் ஒரு ஒப்பந்தம் குறித்து பேசினார். அவர் பேசியது பின்வருமாறு,
 
தமிழ் - தெலுங்கு ஆகிய மொழிகளிடையே இருந்து வந்த பிணைப்பு குறைந்து வருகிறது. உலகில் தமிழ் மொழி பேசுபவர்களைவிட சுமார் ஒன்றரை கோடி அதிகமானவர்கள் தெலுங்கு பேசுகிறார்கள். தமிழகத்தில் தெலுங்கு மொழியைத் தாய் மொழியாகக் கொண்ட ஒரு கோடி பேர் வாழ்கின்றனர். 
 
இவர்கள் அனைவரும், தங்கள் தாய்மொழி தமிழ் எனக் பதிவு செய்கிறார்கள். இந்த நிலையை தமிழிசை நினைத்தால் மாற்ற முடியும். தமிழிகை அரசியல் ரீதியாக தெலங்கானா அரசுடன் இணைந்து தமிழ்நாட்டுடன் ஓபந்தங்களை ஏற்படுத்தலாம்.
 
ஒரே பாரதம் உண்ணத பாரதம் திட்டத்தின் கீழ் இந்த ஒப்பந்தத்தை தமிழிசை கொண்டுவரலாம். இதன் மூலம் தமிழகத்தில் வாழும் தெலுங்கு பேசும் மக்கள் பயனடைவார்கள் என தெரிவித்தார். 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்