தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை பாதிப்புகள் தீவிரமடைந்த நிலையில் புதிதாக ஆட்சியமைத்த திமுக அரசு பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. மேலும் கொரோனா முன்கள பணியாளர்களான மருத்துவர்கள், செவிலியர்களுக்கு உணவு, தங்குமிட வசதி உள்ளிட்டவை ஏற்படுத்தி தரப்படுகின்றன.
இந்நிலையில் தற்போது இதுகுறித்து தெரிவித்துள்ள அமைச்சர் மா.சுப்பிரமணியன் “மருத்துவ முன்கள பணியாளர்களுக்கு உணவு, தங்குமிடம் வழங்குவதில் அதிமுக ஆட்சியின்போது இருந்த இடைத்தரகர்களை ஒழித்ததால் தற்போது மாதத்திற்கு ரூ.10 கோடி அரசுக்கு மிச்சமாகிறது” என தெரிவித்துள்ளார்.