இனப்பெருக்கத்தை குறைக்க இன்ஸ்டெண்ட் ஐடியா: சைண்டிஸ்ட் அமைச்சரை மிஞ்சிய வனத்துறை அமைச்சர்

செவ்வாய், 8 ஜனவரி 2019 (15:44 IST)
யானைகளின் இனப்பெருக்கத்தை குறைக்க நாம் போதிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கூறியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. -

 
அதிமுக அமைச்சர்கள் பலர் வாயை திறந்தாலே சர்ச்சை தான். அதிலும் முக்கியமாக அமைச்சர்கள் செல்லூர் ராஜு, ராஜேந்திர பாலாஜி உள்ளிட்டோர் சர்ச்சைக் கருத்தை கூறி சிக்கலில் சிக்குவதை வாடிக்கையாகவே வைத்துள்ளனர்.
 
இந்நிலையில் அவர்களுக்கெல்லாம் டஃப் கொடுக்கும் விதமாக பேசியிருக்கும் வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், காடுகளில் இருந்து ஊருக்குள் புகும் யானைகளால் மக்கள் பெரிதும் பாதிக்கப்படுகிறார்கள். இதனைக் போக்க யானைகளின் இனப்பெருக்கத்தை குறைக்க வேண்டும். இதற்கு நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து ஐடியா செய்ய வேண்டும் என கூறினார்.
 
இதனைக்கேட்டு அங்கிருந்தவர்கள் குபீரென சிரித்துவிட்டனர். இவருக்கு எங்கிருந்து இந்த மாதிரியான யோசனை எல்லாம் வருகிறது என்றும் அமைச்சர் செல்லூர் ராஜுவையே நீங்கள் மிஞ்சுவிட்டீர்கள் எனவும் அவரை சமூகவலைதளத்தில் பலர் கிண்டலடித்து வருகின்றனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்