அமைச்சர் துரைமுருகனுக்கு திடீர் உடல்நலக்கோளாறு: சென்னை மருத்துவமனையில் அனுமதி..!

செவ்வாய், 19 டிசம்பர் 2023 (17:30 IST)
தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகனுக்கு திடீரென உடல்நல குறைவு ஏற்பட்டுள்ளதை அடுத்து சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன
 
கடந்த சில நாட்களாக அமைச்சர் துரைமுருகனுக்கு சளி, இருமல் தொல்லை இருந்ததாகவும் இதனை அடுத்து அவர் சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. 
 
அமைச்சர் துறைமுகத்திற்கு தேவையான சிகிச்சைகளை மருத்துவ குழுவினர் வழங்கி வருவதாகவும் அமைச்சர் துரைமுருகனின் உடல்நலம் குறித்து அறிக்கை விரைவில் வெளியாகும் என்று கூறப்படுகிறது. 
 
மேலும் இன்று அல்லது நாளை அமைச்ச துரைமுருகன் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்