அமைச்சர் பொன்முடி விடுதலை ரத்து: தண்டனை விவரங்கள் டிசம்பர் 21 என அறிவிப்பு..!

செவ்வாய், 19 டிசம்பர் 2023 (11:12 IST)
சொத்து குவிப்பு வழக்கிலிருந்து அமைச்சர் பொன்முடி விடுதலை செய்யப்பட்டது ரத்து செய்யப்பட்டதாகவும் டிசம்பர் 21ஆம் தேதி பொன்மடி மற்றும் அவரது மனைவி நேரில் ஆஜராக வேண்டும் என்றும் அன்றைய தினம் தண்டனை குறித்து அறிவிப்பு வெளியாகும் என்றும் சென்னை ஹைகோர்ட் தெரிவித்துள்ளது.
 
கடந்த 2006 ஆம் ஆண்டு முதல் 2011ம் ஆண்டு வரை திமுக ஆட்சி காலத்தில் உயர் கல்வித்துறை அமைச்சர் ஆக இருந்த பொன்முடி மற்றும் அவரது மனைவி ஆகியோர் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக லஞ்ச ஒழிப்பு துறை வழக்கு பதிவு செய்தது.  
 
இந்த வழக்கில் பொன்முடி மற்றும் அவரது மனைவி விடுதலை செய்யப்படுவதாக சென்னை சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்த நிலையில் இந்த தீர்ப்பை எதிர்த்து  மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.  
 
இந்த நிலையில் அமைச்சர் பொன்முடி விடுதலை ரத்து செய்யப்படுவதாகவும் டிசம்பர் 21-ஆம் தேதி அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மனைவி ஆஜராக வேண்டும் என்றும் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. 
 
தண்டனை விவரங்களை அறிவிக்க விசாரணை டிசம்பர் 21ஆம் தேதிக்கு தள்ளி வைக்கப்படுவதாகவும் லஞ்ச ஒழிப்பு துறையின் மேல்முறையீட்டு வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது.
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்