பொங்கல் தொகுப்பை வைத்து பொய்ப்பிரச்சாரம் செய்கின்றனர்: அமைச்சர் சக்கரபாணி

செவ்வாய், 11 ஜனவரி 2022 (17:59 IST)
பொங்கல் தொகுப்பை வைத்து பொய்ப்பிரச்சாரம் செய்கின்றனர்: அமைச்சர் சக்கரபாணி
பொங்கல் தொகுப்பை வைத்து ஓபிஎஸ், ஈபிஎஸ் பொய்ப்பிரச்சாரம் செய்கின்றனர் என அமைச்சர் சக்கரபாணி கூறியுள்ளார். அவர் மேலும் கூறியதாவது:
 
முதலமைச்சரின் தேர்தல் வாக்குறுதியை நிறைப்வேற்றும் வகையில் கொரோனா நிதி ரூ.4000 வழங்கப்பட்டது. திமுக ஆட்சியில் கொடுத்து வந்த பொங்கல் பரிசு தொகுப்பை 2012ல் அதிமுக ஆட்சி நிறுத்தியது.
 
அதிமுக ஆட்சியில் முறைகேடு செய்தவர்கள் தற்போது தரமான பொங்கல் பரிசு வழங்குவதை குறை சொல்கிறார்கள். ஆளும் அரசை குறைகூறும் நோக்கத்தில் ஓ.பி.எஸ். தவறான கருத்துகளை பதிவிட்டு வருகிறார்கள்.
 
பொங்கல் பரிசு தொகுப்பை வைத்து எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் பொய் பிரசாரம் செய்கின்றனர். ஆதாரங்களுடன் நேரில் வந்தால் பதில் கூற தயார் என ஓ.பி.எஸ்.க்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி தெரிவித்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்