காலாண்டு, அரையாண்டு தேர்வு இல்லை - அமைச்சர் அன்பில் மகேஷ்!

செவ்வாய், 12 அக்டோபர் 2021 (17:50 IST)
தமிழகத்தில் கொரோனா காரணமாக பள்ளிகள் மூடப்பட்டிருந்த நிலையில் தற்போது 9 முதல் 12 வரை உள்ள வகுப்புகளுக்கு பள்ளிகள் தொடங்கி நடந்து வருகின்றன. இதையடுத்து நவம்பர் 1 ம் தேதி முதலாக 1ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
 
இந்நிலையில் 10, 11, 12ம் வகுப்புகளுக்கு நடப்பாண்டு காலாண்டு, அரையாண்டு தேர்வுகள் கிடையாது எனவும் மார்ச், ஏப்ரல் மாதங்களில் நேரடியாக பொதுத்தேர்வுகள் நடைபெறும் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். 
 
பொதுத்தேர்வுக்கு முன் மாணவர்கள் பயிற்சி பெறும் வகையில் டிசம்பர் மாதத்தில் தேர்வு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், ஏற்கனவே அறிவித்தபடி நவம்பர் 1ஆம் தேதி 1 முதல் 8ம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறக்கப்படும் என அவர் கூறியுள்ளார். 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்