ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக கார்கில் போர் வீரப்பதக்கத்தை அரசிடம் திருப்பிக்கொடுத்த முன்னாள் ராணுவ வீரர்!

புதன், 18 ஜனவரி 2017 (14:42 IST)
தமிழகம் முழுவதும் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக மக்கள் போராட்டம் வெடித்துள்ளது. அரசின் மீதான நம்பிக்கை இழப்பின் காரணமாக தாங்க இந்த போராட்டத்தை நடத்துவதாக போராட்ட களத்தில் உள்ள இளைஞர்கள் கூறுகின்றனர்.


 
 
இந்நிலையில் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் இளைஞர்கள் மற்றும் மாணவர்களுக்கு பொதுமக்களின் ஆதரவு பெருகி பலரும் ஆர்வத்துடன் தங்களை போராட்டத்தில் இணைத்து வருகின்றனர். மத்திய, மாநில அரசுகள் மீதும் பீட்டா அமைப்பின் மீதும் கடும் விமர்சனங்களை வைத்து வருகின்றனர்.
 
இந்நிலையில் முன்னாள் கார்கில் போர் வீரர் செல்வராமலிங்கம் அவருக்கு அரசு வழங்கிய கார்கில் போர் வீரப்பதக்கத்தை ஐல்லிக்கட்டுக்காக ஆதரவு தெரிவித்து சேலம் ஆட்சியரிடம் ஒப்படைத்துள்ளார்.
 
மாவட்ட ஆட்சியரிடம் ஒப்படைத்த வீரப்பதக்கத்துடன் அவர் வழங்கிய கடிதத்தில், நான் ஒரு முன்னாள் இந்திய விமானப்படை வீரர். கார்கில் போராளி. நம் தமிழ் வீரவிளையாட்டு ஜல்லிக்கட்டு விளையாட தடை குறித்து மிகுந்த மனவேதனை அடைந்தேன்.
 
ஜல்லிக்கட்டு தடையை குறித்து எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் எனக்கு இந்திய அரசால் வழங்கப்பட்ட ( “ Operation Vijay" Medal) வீர பதக்கத்தை திருப்பி அரசுக்கே கொடுத்திட முடிவு செய்துள்ளேன் என கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்