17 பேரின் பரிதாப பலிக்கு பதில் என்ன? ஜாமீனில் வெளிவந்த சிவசுப்பிரமணியன்

வெள்ளி, 20 டிசம்பர் 2019 (18:52 IST)
மேட்டுப்பாளையம் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்த விவகாரத்தில் ஜாமீன் கோரியிருந்த  சிவசுப்பிரமணியத்திற்கு இன்று நிபந்தனை ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. 
 
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் நடூர் பகுதியில், ஆதி திராவிடர் காலணியில் 20 அடி சுற்றுச்சுவர் இடிந்து 17 பேர் உயிரிழந்தனர். இந்த சுவர் தீண்டாமை சுவர் எனவும் கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து தலைமறைவான சுற்றுச்சுவர் வீட்டின் சொந்தக்காரர் சிவசுப்பிரமணியத்தை போலீஸார் வலை வீசி தேடி வந்தனர்.
 
இந்நிலையில் தனது வீட்டை சுற்றி 20 அடி உயர்த்துக்கு கல்சுவர் கட்டிய வீட்டின் உரிமையாளர் சிவசுப்பிரமணியத்தை போலீஸார் கைது செய்தனர். அதன் பின்னர் சிவசுப்பிரமணியத்தை கோவை மத்திய சிறையில் அடைத்தனர். 
 
இதனைத்தொடர்ந்து ஜாமீன் கோரியிருந்த  சிவசுப்பிரமணியத்திற்கு இன்று நிபந்தனை ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. ஒரு லட்சம் ரூபாய்க்கான சொந்த ஜாமீனும், அதே தொகைக்கான இரு நபர் ஜாமீனும் செலுத்த உத்தரவிட்ட நீதிபதி, மறு உத்தரவு வரும் வரை மதுரையில் தங்கியிருந்து மாவட்ட நீதிமன்றத்தில் கையெழுத்திட வேண்டும் என நிபந்தனை விதித்தார். 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்