இந்நிலையில் விற்பனை செய்யப்படும் தண்ணீரை ஆன்லைனில் பதிவு செய்து முறையாக வாங்காமல் ஒப்பந்தக்காரர்கள் மற்றும் டிரைவர்களின் மூலம் முறைகேடாக வாங்குவதும் நடக்கிறது. அதை தடுக்கும் விதமாக முறைகேடாக தண்ணீர் சப்ளை செய்யும் லாரிகளுக்கு 20000 ரூபாய் வரை அபராதமும், லாரி உரிமையாளர், டிரைவர் மற்றும் தண்ணீர் வாங்கியவர் ஆகியவர்களுக்கு 3 ஆண்டுகள் வரை சிறை தண்டனையும் வழங்கப்படும் என சொல்லப்பட்டுள்ளது.