காலாவதியாகும் தடுப்பூசிகள்: தமிழகத்தில் மீண்டும் தடுப்பூசி முகாமுக்கு ஏற்பாடு!

வெள்ளி, 22 ஏப்ரல் 2022 (10:33 IST)
வாரம் தோறும் சிறப்பு மெகா தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டு வந்த நிலையில் அது நிறுத்தப்பட்டிருந்த நிலையில் மீண்டும் துவக்கம். 

 
நிறுத்தப்பட்ட மெகா தடுப்பூசி முகாம்: 
தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்க வாரம் தோறும் சிறப்பு மெகா தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டு வந்தது. இதுவரை 27 சிறப்பு தடுப்பூசி முகாம்கள் வாரம் தோறும் நடைபெற்றுள்ளன. இந்நிலையில் தமிழகத்தில் இதுவரை 91% பேர் முதல் தவணை தடுப்பூசியும், 73% பேர் 2 தவணை தடுப்பூசியும் போட்டுள்ளனர். இதனைத்தொடர்ந்து இனி வாரம் தோறும் சிறப்பு தடுப்பூசி முகாம் நடத்தப்படாது என தமிழக அரசு சார்பில் முன்னர் அறிவிக்கப்பட்டது. 
 
தமிழகத்தில் காலாவதியாகும் தடுப்பூசிகள்: 
தற்போது தமிழகத்தில் உள்ள 1.28 கோடி தடுப்பூசிகள் 5 மாதத்திற்குள் காலாவதியாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து பேசியுள்ள தமிழ்நாடு மருத்துவம் மற்றும் மக்கள் நலவாழ்வு துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், தமிழ்நாடு கைவசம் 1.28 கோடி தடுப்பூசிகள் உள்ளன. தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்கள் எண்ணிக்கை 1.78 கோடியாக உள்ளது. 
மக்கள் முன்வந்து தடுப்பூசி செலுத்திக் கொண்டாலே தடுப்பூசி இருப்பு காலியாகும். ஆரம்பத்தில் மக்கள் ஆர்வமாக தடுப்பூசி செலுத்திக் கொண்டாலும், கொரோனா குறைந்த பிறகு தடுப்பூசி செலுத்திக் கொள்வதையும் குறைத்துக் கொண்டுள்ளனர். தற்போது கொரோனா அதிகரிக்க தொடங்கி வருவதால் மக்கள் முன்னெச்சரிக்கையாக தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என கோரியிருந்தார். 

 
மீண்டும் துவங்கும் மெகா தடுப்பூசி முகாம்: 
இதனிடையே சற்றுமுன் வெளியாகியுள்ள அறிவிப்பில் தமிழகத்தில் மே மாதம் 8 ஆம் தேதி முதல் மீண்டும் மெகா சிறப்பு தடுப்பூசி முகாம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுநாள் வரை நடந்தது போல இனியும் காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை ஒரு லட்சம் இடங்களில் தடுப்பூசி முகாம் நடத்தப்படும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்