ஏப்ரல் 14-க்கு பிறகு ஊரடங்கு நீட்டிக்கப்படுமா.. ஈபிஎஸ் சொல்வது என்ன?
புதன், 1 ஏப்ரல் 2020 (10:39 IST)
தமிழகத்தில் ஏப்ரல் 14 ஆம் தேதிக்கு பிறகு ஊரடங்கு நீட்டிக்கப்படுமா என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பதில் அளித்துள்ளார்.
இந்தியா முழுவதும் கொரோனா தீவிரமாக பரவி வரும் நிலையில் தமிழகத்தில் நேற்று மதியம் வரை பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 74 ஆக இருந்தது. திடீரென இந்த எண்ணிக்கை வேகமாக உயர்ந்த 124 ஆக உள்ளது. இதனால் தேசிய அளவில் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலங்களில் மூன்றாம் இடத்தில் தமிழகம் உள்ளது.
இந்நிலையில், தமிழகத்தில் ஏப்ரல் 14 ஆம் தேதிக்கு பிறகு ஊரடங்கு நீட்டிக்கப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. இதற்கு தற்போது எடப்பாடி பழனிச்சாமி பதில் அளித்துள்ளார். அவர் கூறியதாவது,
கொரோனா தொற்றின் தாக்கத்தை அறியாமல் மக்கள் வெளியே வருகின்றனர். மக்களின் ஒத்துழைப்பு இருந்தால் தான் கொரோனா பரவலை தடுக்க முடியும். தமிழகத்தில் ஏப்ரல் 14ஆம் தேதிக்கு பிறகு ஊரடங்கு நீட்டிக்கப்படுமா என்பது குறித்து மத்திய அரசு தான் முடிவு செய்யும் என தெரிவித்துள்ளார்.
இதற்கு முன்னர் மத்திய அரசும் இப்போதைக்கு ஊரடங்கை நீட்டிப்பது குறித்து எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என தெரிவித்தது என்பது குறிப்பிடத்தக்கது.