வைகோ முன்னிலையில் மதிமுக-நாம் தமிழர் தொண்டர்கள் மோதல்: உசிலம்பட்டியில் பரபரப்பு

செவ்வாய், 3 ஏப்ரல் 2018 (21:28 IST)
நியூட்ரியோனா திட்டத்தை எதிர்த்து நடைப்பயணம் செய்து வரும் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ இன்று உசிலம்பட்டிக்கு வருகை தந்தார்.

உசிலம்பட்டி அருகேயுள்ள பெருங்காமநல்லூர் என்ற பகுதியில், கைரேகை சட்டத்தை எதிர்த்து போராட்டம் நடத்தியவர்களின் நினைவிடத்தில் வைகோ அஞ்சலி செலுத்தினார். பின்னர் அங்கிருந்து திரும்பும்போது, நாம் தமிழர் கட்சி தொண்டர்கள் சிலர் அந்த பகுதியில் இருந்தனர்.

அவர்களை பார்த்த வைகோ, எனது சாதியைச் சொல்லி மீம்ஸ் போடுவதை நிறுத்தி கொள்ளுங்கள் என்றும், எதற்கும் துணிந்தவன் வைகோ என்பதை சீமானிடத்தில் செல்லுங்கள் என்று, எச்சரித்தார்

இதனால் ஆத்திரம் அடைந்த  நாம் தமிழர் கட்சியினர் வைகோவை வெறுப்பேற்றும் வகையில் வீரவணக்கம் வீரவணக்கம் என முழக்கமிட்டனர். இதனால் எரிச்சலடைந்த  வைகோ, நாம் தமிழர்கள் தொண்டர்களை நோக்கி  கையால் சைகை காட்டி எச்சரித்தார். இதனையடுத்து, மதிமுக - நாம் தமிழர் தொண்டர்களிடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது. இந்த நிலையில் அங்கிருந்த காவல்துறையினர் இருதரப்பினரகளையும் சமாதானம் செய்து பின்னர் வைகோவை பத்திரமாக அனுப்பி வைத்தனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்