கோடைக்காலம் என்றாலே வெயில் வாட்டுவது ஒரு பக்கம் இருந்தாலும், விதவிதமாக தித்திக்கும் மாம்பழங்கள் கிடைக்கும் காலம் என்பதால் பலரும் ஒரே குஷியாகி விடுகின்றனர். இந்தியாவில் மாம்பழ உற்பத்தியில் தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளது.
தமிழ்நாட்டின் சேலம், நாமக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் மாம்பழங்கள் அதிகளவு சாகுபடி செய்யப்படுகின்றனர். தமிழகத்தில் சாகுபடி செய்யப்படும் மாம்பழங்கள் வெளிநாடுகள் பலவற்றிற்கும் கூட ஏற்றுமதி செய்யப்படுகின்றன.
முக்கியமாக நாட்டு மாங்காய் தவிர்த்து அல்பொன்சா, மல்கோவா, பங்கணபள்ளி, செந்தூரா உள்ளிட்ட மாம்பழங்களுக்கு நல்ல டிமாண்ட் உள்ளது. தற்போது மாம்பழ சீசன் தொடங்கியுள்ள நிலையில் மாம்பழ சாகுபடியும் அதிகரித்துள்ளது.
இதனால் சேலம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து மாம்பழங்கள் அதிகளவில் பிற மாவட்டங்களுக்கு அனுப்பப்பட்டு வருகின்றன. ஒரு கிலோ மாம்பழம் ரகம் மற்றும் வரத்தை பொறுத்து ரூ.50 முதல் ரூ.130 வரை விற்பனையாகி வருகிறது. மாம்பழ விளைச்சல் மற்றும் விலை குறைவு வியாபாரிகள், பொதுமக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.