வேலூர் மாவட்டம், திருப்பத்தூர் பகுதியை சேர்ந்தவர் லட்சுமணன் (48). இவர் அங்கு ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வந்தார். இவருக்கு திருமணமாகி ஒரு மகன் இருக்கிறார். அந்நிலையில், லட்சுமணன் ஆசிரியர் வேலையை விட்டுவிட்டு, ஏலகிரி மலையில் உள்ள ஒரு தனியார் விடுதிகளில் சேவை வரிகளை வசூலித்து, அதை வருமான வரித்துறை அலுவலகத்தில் கட்டும் பணியை செய்து வந்தார்.
இந்நிலையில் அவர் நேற்று காலை ஏலகிரி புத்தூர் சாலையோரம் ரத்த வெள்ளத்தில் கொலை செய்யப்பட்டு கிடந்தார். இதையடுத்து போலீசார் நடத்திய விசாரணையில் புங்கனூர் பகுதியை சேர்ந்த கவிதா என்ற பெண்ணுடன் அவருக்கு ஏற்கனவே கள்ளக்காதல் இருந்து வந்துள்ளது. அந்நிலையில், கவிதாவின் விட்டிற்கு எதிரே வசித்து வந்த தீபக் என்பவரின் மனைவி வனிதா என்பவருடனும் லட்சுமணனுக்கு பழக்கம் ஏற்பட, நாளைடைவில் கள்ளக்காதலாக மாறியுள்ளது.
இது தொடர்பாக லட்சுமணனை தீபக் பலமுறை கண்டித்துள்ளார். ஆனால், அவரின் மனைவி வனிதாவுடனான கள்ளக்காதலை லட்சுமணன் விடவில்லை எனத்தெரிகிறது. இந்நிலையில், சம்பவத்தன்று வனிதாவை தனது மோட்டார் சைக்கிளில் ஏற்றி கொண்டு லட்சுமணன் செல்வதை தீபக் பார்த்துள்ளார். அப்போது ஏற்பட்ட தகராறில், லட்சுமணனை தீபக் வெட்டி கொலை செய்து விட்டதாக தெரிகிறது.