3 வயது பெண் குழந்தைக்கு பாலியல் தொல்லை கொடுத்தவர் கைது!

செவ்வாய், 29 மார்ச் 2022 (11:46 IST)
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே சமையல் மாஸ்டராக இருப்பவருக்கு 3 வயதில் ஒரு பெண் குழந்தை இருக்கிறது. மஹால் ஒன்றில் திருமண ஆர்டர் எடுத்து அங்கு தனது மனைவி குழந்தைகளுடன் சென்று வேலைபார்த்துக்கொண்டிருந்தபோது அவரது 3 வயது குழந்தை பாத்ரூமில் அழுத சத்தத்தை கேட்டு ஓடிவந்து பார்த்துள்ளனர். 
 
அப்போது அங்கு 50 வயது உள்ள ரவீந்திரன் என்பவர் அந்த குழந்தைக்கு பாலியல் தொல்லை கொடுப்பதை பார்த்து அதிர்ந்து போய் போலீசுக்கு தகவல் கொடுத்துள்ளனர். பின்னர் அங்கு விரைந்து வந்த போலீசார் போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து ரவீந்திரனை கைது செய்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்