மாலைமுரசு நாளிதழ் மீது மானநஷ்ட வழக்கு

வியாழன், 23 ஜூன் 2016 (18:46 IST)
லைகா நிறுவனம் சார்பில், மாலைமுரசு நாளிதழ் மீது மானநஷ்ட வழக்கு தொடரப்பட்டுள்ளது.


 

பிரான்ஸில் லைகா அலுவலகத்தில் ரெய்டு நடைபெற்று 19 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில், லைகா மொபைலின் பிரான்ஸ் இயக்குநர்களுள் ஒருவரான அலெய்ன் ஜோசிமெக்கும் சிக்கியுள்ளார்.

மேலும், கைது செய்யப்பட்ட 19 பேரில், 9 பேர் வரி ஏய்ப்புக்காகவும், மீதி 10 பேர் பண மோசடிக்காக கைது செய்யப்பட்டுள்ளதாக மாலை முரசு நாளிதழ் செய்தி வெளியிட்டது.

இதனையடுத்து சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் அதன் இயக்குநர் கண்ணன் ஆதித்தன் மீதும் ஆசிரியர் எஸ்.என்.செல்வத்தின் மீதும் மானநஷ்ட வழக்கு தொடரப்பட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்