நகர்புற உள்ளாட்சி தேர்தலில் முறைகேடு..! – மநீம உள்ளிட்ட கட்சிகள் புகார்!

ஞாயிறு, 20 பிப்ரவரி 2022 (15:40 IST)
நடந்து முடிந்த நகர்புற உள்ளாட்சி தேர்தலில் முறைகேடு நடந்தததாக மக்கள் நீதி மய்யம் உள்ளிட்ட கட்சிகள் புகார் அளித்துள்ளன.

தமிழக நகர்புற உள்ளாட்சி தேர்தல் நேற்று ஒரே கட்டமாக நடந்து முடிந்தது. பொதுமக்கள், அரசியல், சினிமா பிரமுகர்கள் உள்பட பலரும் தேர்தலில் தங்கள் வாக்குகளை செலுத்தினர். தமிழகம் முழுவதும் 60 சதவீதத்திற்கும் மேல் வாக்குப்பதிவாகியுள்ளது.
இந்நிலையில் தேர்தல் நடந்த பல பகுதிகளில் முறைகேடு நடந்ததாகவும், கள்ள ஓட்டுகள் போடப்பட்டதாகவும் பல கட்சிகள் புகார் கூறி வருகின்றன. முன்னதாக திமுக கள்ள ஓட்டு போட்டதாக அதிமுக எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டினார்.

தற்போது சென்னை கோயம்பேட்டில் உள்ள தேர்தல் ஆணையத்தை முற்றுகையிட்டு, கருப்பு துணியால் கண்களை கட்டிக்கொண்டு மக்கள் நீதி மய்யத்தினர் போராட்டம் செய்துள்ளனர். தேர்தலில் கடைசி ஒரு மணி நேரத்தில் பதிவான வாக்கு விவரங்களையும், சிசிடிவி காட்சிகளையும் வெளியிட வேண்டும் என மக்கள் நீதி மய்ய நிர்வாகிகள் கோரிக்கை விடுத்தனர். இதேபோல நகர்புற உள்ளாட்சி தேர்தலில் ஆளும் கட்சியினரால் முறைகேடு நடந்துள்ளதால் மறு தேர்தல் நடத்த வேண்டும் என எஸ்.டி.பி.ஐ கட்சியும் தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்துள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்