தனியார் தங்கும் விடுதிகளுக்கு மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல்!

J.Durai

வியாழன், 3 அக்டோபர் 2024 (08:54 IST)
மதுரையில் உள்ள சின்ன சொக்கிகுளம் பகுதியில் உள்ள பிரபல தங்கும் விடுதி  (ஜெசி ரெசிடென்சி), காளவாசல் பகுதியில் உள்ள (ஜெர்மானஸ்) தங்கும் விடுதி, பெரியார் பேருந்து நிலையம் பகுதியில் உள்ள (மதுரை ரெசிடென்சி) பெருங்குடி மண்டேலா நகர் பகுதியில் உள்ள அமிக்கா ஆகிய  நான்கு தங்கு விடுதிகளுக்கு இமெயில் மூலமாக வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளதது.
 
இதனையடுத்து சம்பந்தப்பட்ட தங்கும் விடுதியில் இருந்த பணியாளர்கள் காவல்
துறை
யினருக்கு தகவல் தெரிவித்தனர். 
 
இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வெடிகுண்டு தடுப்பு பிரிவு போலீசார் சோதனை செய்தனர் சோதனையில், இது வதந்தி என்று தெரிய
வந்தது. 
 
மேலும் இரண்டு தினங்களுக்கு முன்பு தான் நான்கு பள்ளியில் இதே
போன்று இமெயிலில் வெடிகுண்டு இருப்பதாக தகவல் வந்தது, அப்பொழுதும் சோதனை செய்தது
புரளி என்று தெரியவந்தது.
 
தொடர்ந்து, இமெயில் மூலமாக பள்ளி தங்கும் விடுதிக்கு ஈமெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வருவதால் அப்பகுதியில் பரபரப்பான சூழ்நிலை நிலவி வருகிறது.
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்