மது உற்பத்தியாளர்கள், விற்பனையாளர்கள், மதுப்பிரியர்கள் நடத்தும் மோசடி மாநாடு: எச் ராஜா

Siva

வியாழன், 3 அக்டோபர் 2024 (07:55 IST)
நேற்றைய காந்தி ஜெயந்தி தினத்தில், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் மது ஒழிப்பு மாநாடு நடைபெற்றது. இந்த மாநாடு மது உற்பத்தியாளர்கள், விற்பனையாளர்கள் மற்றும் மது பிரியர்கள் இணைந்து நடத்தும் அரசியல் மோசடி மாநாடாகும் என்று பாஜகவை சேர்ந்த எச். ராஜா விமர்சித்துள்ளார், இது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

புதுக்கோட்டையில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த ராஜா, மது ஒழிப்பு மாநாடு குறித்து பேசும்போது, "மது உற்பத்தியாளர்கள், விற்பனையாளர்கள் மற்றும் மது பிரியர்கள் இணைந்து நடத்தும் அரசியல் மோசடி மாநாடு தான், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் நடத்தப்படும் மது ஒழிப்பு மாநாடு," என்று தெரிவித்தார்.

மேலும், "தமிழகத்தில் 500 கடைகள் மூடப்படுவதாக கூறிய திராவிட மாடல் அரசு ஆயிரம் மனமகிழ் மன்றங்களை  திறந்துள்ளது," என்றும் அவர் கூறினார். பழனி முருகன் கோவிலின் கோபுரத்தில் ஏற்பட்ட சேதம் ஏற்பட்டிருப்பது கோவிலின் கட்டுமான தரம் குறைவாக இருப்பதை உறுதி செய்ததாகவும் அவர் தெரிவித்தார்.

பொன்முடி உயர்கல்வித் துறை அமைச்சராக இருந்தபோது, கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்களில் பேராசிரியர் நியமனங்களில் மோசடி நடந்ததாகவும், அதுகுறித்து விசாரணை செய்ய வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.அதிமுகவின் வாக்குகள் குறைந்ததற்கு, எம்ஜிஆர், ஜெயலலிதா போன்ற ஒரு வலிமையான தலைவர் இல்லை என்ற காரணமாக இருக்கலாம் என்று அவர் குற்றம் சாட்டினார்.


Edited by Siva
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்