கடனை கேட்ட பெண்ணுக்கு ஆபாச மெசேஜ்! – மதுரையில் ஆசாமி கைது!

செவ்வாய், 5 ஜனவரி 2021 (13:17 IST)
மதுரையில் கொடுத்த கடனை கேட்ட பெண்ணுக்கு ஆபாசமாக குறுஞ்செய்தி அனுப்பிய ஆசாமியை போலீஸார் கைது செய்துள்ளனர்.

மதுரை தெப்பக்குளம் பகுதியை சேர்ந்தவர் சங்கர். இவர் அதே பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணிடம் கடனாக சில லட்சங்கள் பணம் பெற்றுள்ளார். நீண்ட காலமாகியும் கடனை திருப்பி செலுத்தாத நிலையில் அந்த பெண் பணத்தை வட்டியுடன் ரூ.17.50 லட்சமாக செலுத்தும்படி சங்கரிடம் கேட்டு வந்துள்ளார்.

இந்நிலையில் சங்கர் அடிக்கடி அந்த பெண்ணுக்கு குறுஞ்செய்தி அனுப்ப தொடங்கியுள்ளார். மேலும் ஆபாசமான குறுஞ்செய்திகளை அவர் அனுப்பியதை தொடர்ந்து அந்த பெண் காவல் நிலையத்தில் இதுகுறித்து புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் நடவடிக்கை எடுத்த போலீஸார் சங்கரை கைது செய்து வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்