தமிழகத்தில் 5 முன்பதிவில்லா பொது பெட்டிகள் உடைய எக்ஸ்பிரஸ் ரயில்கள் இயக்கப்படும் என தென்னக ரயில்வே தெரிவித்துள்ளதற்கு மதுரை எம்பி வெங்கடேசன் வரவேற்பு தெரிவித்துள்ளார். இருப்பினும் சாதாரண கட்டணத்தில் வண்டிகள் இயக்கப்பட வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறியிருப்பதாவது:
இப்போது மதுரை கோட்டத்திற்கு உட்பட்ட புனலூர்- கொல்லம் ;மதுரை- இராமேஸ்வரம்; திருச்செந்தூர்- திருநெல்வேலி; செங்கோட்டை- திருநெல்வேலி ஆகிய ரயில் நிலையங்களுக்கு இடையே முன்பதிவில்லா பொது பெட்டிகளைக் கொண்ட விரைவு ரயில் 30 .5 .2022 முதல் இயக்கிட தெற்கு ரயில்வே முடிவெடுத்துள்ளது. அதற்கான உத்தரவு 17 .5 .22 வெளியிடப்பட்டுள்ளது .