ஆற்றில் அழகர் இறங்கும் திருவிழா: 2 ஆண்டுகளுக்கு பின் பக்தர்களுக்கு அனுமதி!

புதன், 9 மார்ச் 2022 (18:28 IST)
மதுரை சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றான வைகை ஆற்றில் கள்ளழகர் இறங்கும் விழாவிற்கு இந்த ஆண்டு பக்தர்கள் அனுமதி உண்டு என அறிவிக்கப்பட்டுள்ளது
 
கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா வைரஸ் பாதிப்பு இருந்ததன் காரணமாக ஊரடங்கு கட்டுப்பாடுகள் இருந்தது. இதன் காரணமாக மதுரை கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபவத்திற்கு பொதுமக்கள் அனுமதிக்கப்படவில்லை
 
இந்த நிலையில் தற்போது கொரோனா வைரஸ் பாதிப்பு குறைந்து உள்ளதை அடுத்து இந்த ஆண்டு சித்திரை திருவிழாவின்போது மதுரையில் கள்ளழகர் ஆற்றில் இறங்கும் போது பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது. இதனால் மதுரை மக்கள் மற்றும் பக்தர்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்