ஜெ.வை சசிகலா குடும்பத்தினர் கொலை செய்து விட்டனர் - மதுசூதனன் பேட்டி

திங்கள், 25 செப்டம்பர் 2017 (12:11 IST)
மறைந்த முதல்வர் ஜெயலலிதா அப்போலோவில் அனுமதிக்கப்பட்டிருந்த போது, என்னாலும் அவரை பார்க்க முடியவில்லை என அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன் தெரிவித்துள்ளார்.


 

 
சமீபத்தில் ஒரு பொதுக்கூட்டத்தில் பேசிய அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் “அப்பலோவில் ஜெ. அனுமதிக்கப்பட்டிருந்த போது யாரும் அவரை பார்க்க வில்லை. சசிகலா தரப்பு யாரையும் அனுமதிக்கவில்லை. எனவே, ஜெ. இட்லி சாப்பிட்டார் என பொய் சொன்னோம்” எனக் கூறினார். 
 
இதையடுத்து இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளது. ஜெ.வின் மரணத்தில் சிபிஐ விசாரணை வைக்க வேண்டும் எனவும், ஜெ. நலமாக இருக்கிறார். அவர் இட்லி சாப்பிட்டார் என பேட்டி கொடுத்த அனைத்து அமைச்சர்களும் விசாரணைக்கு உட்படுத்தப்பட வேண்டும் எனவும் மு.க.ஸ்டாலின் உட்பட பல அரசியல் தலைவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
 
இந்நிலையில், நேற்று செய்தியாளர்களிடம் பேசிய அவைத்தலைவர் மதுசூதனன் “ மருத்துவமனையில் ஜெ. இருந்த போது என்னாலும் அவரை பார்க்க முடியவில்லை. இதை நான் அப்போதே கூறினேன். திண்டுக்கல் சீனிவாசன் இப்போதுதான் அதை கூறியிருக்கிறார். ஜெ.வை சசிகலா குடும்பத்தினர் கொலை செய்து விட்டனர். தசரா விழாவில் சூரனை வதம் செய்தது போல, துர்க்கை அம்மன் சசிகலா குடும்பத்தினரை பழி வாங்குவார்” என அவர் கூறினார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்