கடந்த சில மாதங்களாக நடைபெற்று வரும் தமிழக அரசியல் குழப்ப நிலையில் சசிகலா, தினகரன் மற்றும் அவரது குடும்பத்தவர்களே கிட்டத்தட்ட காணாமல் போகும் நிலை ஏற்பட்டுவிட்ட நிலையில் அவ்வப்போது அறிக்கைகளை விட்டு நானும் 'உள்ளேன் அய்யா' என்று கூறி வருபவர் தீபா.
இன்று காலை ஜெயலலிதா சமாதியில் மாதவன் புதிய கட்சி துவங்க உள்ளார். என்றும் சமாதி அருகில் நின்று கட்சியின் கொடி மற்றும் பெயரை அவர் அறிமுகப்படுத்தி வைக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து மாதவனிடம் பேசிய போது, "ஜெயலலிதா, எம்.ஜிஆர் மறைவுக்குப் பிறகு தமிழகத்தில் அரசியல்வெற்றிடம் ஏற்பட்டுள்ளது. அ.தி.மு.க-வினர் இரண்டாக பிரிந்து அடித்துக் கொள்கின்றனர். எனவே, என்னால்தான், அந்த வெற்றிடத்தை நிரப்ப முடியும். அதனால் புது கட்சி துவங்குகிறேன்" என்று கூறினார்.