இந்தாண்டு 7.5% உள் இட ஒதுக்கீடு பறிபோகும் அபாயம்: அமைச்சர் மா.சுப்பிரமணியன்

திங்கள், 12 ஜூன் 2023 (17:05 IST)
இந்தாண்டு 7.5% உள் இட ஒதுக்கீடு பறிபோகும் அபாயம் இருப்பதாக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
 
பொது கலந்தாய்வு கொள்கையை மத்திய அரசு கைவிடாவிட்டால் சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறிய அமைச்சர் மா சுப்பிரமணியன், இந்தாண்டு பொது கலந்தாய்வு வருவதற்கு வாய்ப்பு இல்லை என்று கூறினார்.
 
மேலும் பொது கலந்தாய்வு கொள்கையை மத்திய அரசு கைவிடாவிட்டால் அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5% உள் இட ஒதுக்கீடு பறிபோகும் அபாயம் இருப்பதாக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
 
பொது கலந்தாய்வு விவகாரம் தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சரை சந்திக்க நேரம் கேட்டுள்ளதாகவும், அவர் கேள்வி ஒன்றுக்கு பதிலளித்தார். 
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்