24 மணி நேரத்திற்குள் அழைப்பு, சிபிஐ விசாரணை: ஆளுநருக்கு எதிராக பொதுநல வழக்கு!!

திங்கள், 13 பிப்ரவரி 2017 (13:21 IST)
24 மணி நேரத்திற்குள் சசிகலாவை ஆட்சியமைக்க ஆளுநர் அழைக்க உத்தரவிடக் கோரி உச்சநீதிமன்றத்தில் எம்.எல்.சர்மா பொதுநல வழக்கு தொடர்ந்துள்ளார்.


 
 
அந்த மனுவில் சசிகலாவுக்கு போதிய எம்.எல்.ஏக்கள் ஆதரவு உள்ளதாகவும், இதுதொடர்பான பட்டியலையும் ஆளுநரிடம்  ஒப்படைத்தும், ஆளுநர் ஆட்சியமைக்க அழைப்பு விடுக்காமல் மெளனம் காத்து வருகிறார்.
 
எனவே, பெரும்பாலான எம்.எல்.ஏக்கள் ஆதரவு இருக்கும் சசிகலாவை ஆட்சியமைக்க ஆளுநர் 24 மணி நேரத்திற்குள் ஆட்சியமைக்க அழைக்குமாறு ஆளுநருக்கு உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று அந்த மனுவில் வழக்கறிஞர் எம்.எல்.சர்மா தெரிவித்துள்ளார்.
 
இதை தவிர்த்து ஆளுநர் ஆட்சி அமைக்க காலம் தாழ்த்தி வருவதற்கான காரணத்தை சிபிஐ விசாரணை செய்ய உத்தரவிட வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
 

வெப்துனியாவைப் படிக்கவும்