அங்கே முடியவில்லை..இங்கதான் முடியுது - ஸ்டாலின்

வெள்ளி, 7 ஜூலை 2017 (12:59 IST)
தமிழக சட்டசபையில் தனக்கு பேச  வாய்ப்பு மறுக்கப்படுவதாகவும், திருமண விழாக்களில் மட்டுமே அதிக நேரம் பேச முடிகிறது என திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.


 

 
தமிழக சட்டசபையில் ஆளும் கட்சியான அதிமுக அமைச்சர்களை பற்றியோ அல்லது வேறு சில முக்கிய விஷயங்களை பற்றியோ திமுக உறுப்பினர்கள் குறிப்பாக எதிர்கட்சி தலைவரான மு.க.ஸ்டாலின் ஆகியோர் பேச சபாநாயகரிடமிருந்து அனுமதி கிடைப்பதில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்து வருகிறது.
 
இந்நிலையில், சமீபத்தில் ஒரு திருமண விழாவில் பேசிய மு.க.ஸ்டாலின் “சட்டசபையில் ஆளும் அரசை புகழ்ந்து பேச மட்டுமே அனுமதி கிடைக்கிறது. ஆட்சியாளர்கள் பற்றி பேசுவதற்கு சபாநாயகர் அனுமதிப்பதில்லை. அந்த சூழ்நிலையில்தான் திமுக உறுப்பினர்கள் வெளியேற வேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது.  சட்டசபையில் அனுமதி கிடைப்பதில்லை. திருமண விழாக்களில்தான் அதிக நேரம் பேச முடுகிறது” என அவர் வருத்தத்துடன் தெரிவித்தார்.

வெப்துனியாவைப் படிக்கவும்