100 பேரை தாண்டாத அழகிரியின் ஆலோசனை கூட்டம்: 1 லட்சம் பேர் சாத்தியமா?

திங்கள், 3 செப்டம்பர் 2018 (09:00 IST)
சென்னையில் நாளை மாலை அமைதி பேரணி நடத்தவுள்ள மு.க.அழகிரி, இந்த பேரணியில் ஒரு லட்சம் பேர் கலந்து கொள்வார்கள் என்று கூறியிருந்தார். ஆனால் இந்த அமைதி பேரணிக்காக அவர் கூட்டிய ஆலோசனை கூட்டத்தில் இதுவரை 100 பேர் கூட கலந்து கொள்ளவில்லை என்ற தகவல் வெளிவந்துள்ளது.

திமுக தலைவராக பதவியேற்றுள்ள மு.க.ஸ்டாலின் தலைமையை தான் ஏற்றுக்கொள்வதாக மு.க.அழகிரி வாய்விட்டு கூறியும் அவரை திமுகவில் சேர்ப்பதற்கான அறிகுறி தெரியவில்லை. திமுகவில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் அமைச்சர்கள் கருப்பசாமி பாண்டியன் மற்றும் முல்லைவேந்தன் ஆகியோர்களை மீண்டும் கட்சியில் சேர்த்து கொள்ள பச்சைக்கொடி காட்டிய மு.க.ஸ்டாலின் அழகிரியை கட்சியில் சேர்க்க வேண்டாம் என்பதில் உறுதியாக இருப்பதாக தெரிகிறது.
 


 
இந்த நிலையில் தன்னுடைய பலத்தை நிருபிக்க வரும் 5ஆம் தேதி சென்னையில் அமைதிப்பேரணி ஒன்றை நடத்த மு.க.அழகிரி திட்டமிட்டுள்ளார். ஆனால் அவர் சொன்னபடி ஒரு லட்சம் பேர் இந்த அமைதிப்பேரணியில் கலந்து கொள்ள வாய்ப்பே இல்லை என்று கூறப்படுகிறது.அதிமுகவில் இருந்து தனி அணியாக பிரிந்த டிடிவி தினகரன், அதிமுகவை விட பெரிய கூட்டத்தை கூட்டி ஆச்சரியப்படுத்தினார். அப்படி ஒரு ஆச்சரியத்தை அழகிரி ஏற்படுத்துவாரா? என்பதை நாளை மறுநாள் வரை பொறுத்திருந்து பார்ப்போம்

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்