நவம்பர் 9ஆம் காற்றழுத்த தாழ்வு: வானிலை ஆய்வு மைய தலைவர் பாலச்சந்திரன்
வெள்ளி, 4 நவம்பர் 2022 (17:45 IST)
நவம்பர் 9ஆம் தேதி வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு உருவாக வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன் அவர்கள் தெரிவித்துள்ளார்
தற்போது வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் சென்னை உள்பட பல்வேறு மாவட்டங்களில் அடுத்த 3 நாட்களுக்கு நல்ல மழை பெய்யும் என்றும் மேற்கு தொடர்ச்சி மலை உள்ள மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்யும் என்றும் தெரிவித்தார்
மேலும் நவம்பர் 9ஆம் தேதி வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகும் என்றும் தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் இலங்கையை ஒட்டி இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக உள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்
இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காற்றழுத்த மண்டலமாக மாறி புயலாக மாறும் வாய்ப்பு இருப்பதாகவும் அவை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு அவ்வப்போது தகவல்கள் கூறப்படும் என்றும் தெரிவித்துள்ளார்
ஏற்கனவே வடகிழக்கு பருவமழை காரணமாக தமிழகம் முழுவதும் நல்ல மழை பெய்து வரும் நிலையில் புயல் உருவானால் அதிக மழை பெய்யும் வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது