மீண்டும் உருவாகிய குறைந்த காற்றழுத்த தாழ்வு.. ஆனால் சென்னை தப்பித்தது..!

வெள்ளி, 8 டிசம்பர் 2023 (17:49 IST)
வங்க கடலில் சமீபத்தில் ஏற்பட்ட  காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறி பெரும் சேதத்தை ஏற்படுத்திய நிலையில் தற்போது அரபிக் கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி தோன்ற இருப்பதாகவும் ஆனால் அதே நேரத்தில் சென்னைக்கு இந்த காற்றழுத்த தாழ்வு காரணமாக எந்த விதமான ஆபத்தும் இருக்காது என்று தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார்.
 
அரபிக் கடலில் உருவாகி இருக்கும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக கோவை, திருப்பூர், சேலம், ஈரோடு, நீலகிரி ஆகிய மாவட்டங்களில் கன மழை பெய்யும் என்றும் திருச்சி, பெரம்பலூர், கரூர் உள்ளிட்ட பகுதிகளில் நல்ல மழை பெய்யும் என்றும்  அவர் தெரிவித்துள்ளார்.
 
மேலும் சென்னை உள்பட வடக்கு மாவட்டங்களில் பெரிய மழை பெய்ய வாய்ப்பு இல்லை என்றும் ஆனால் அதே நேரத்தில் கேரளா எல்லைப் பகுதியில் உள்ள மாவட்டங்களுக்கு  அடுத்த இரண்டு நாட்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. குறிப்பாக கன்னியாகுமரி, நெல்லை, விருதுநகர், தேனி, தென்காசி, கொடைக்கானல் ஆகிய பகுதிகளில் கன மழை பெய்யும். மதுரை, ராமநாதபுரம், திண்டுக்கல், சிவகங்கை பகுதியிலும் மழை பெய்யும் என்று தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார்.
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்