வீடுகள்தோறும் குறைந்த விலை இண்டெர்நெட்! வாட்ஸப்பில் இ-சேவை! - அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அறிவிப்பு!

Prasanth Karthick

வெள்ளி, 25 ஏப்ரல் 2025 (15:32 IST)

தமிழகத்தில் அனைவருக்கும் குறைந்த விலை இண்டெர்நெட் இணைப்பு அமைத்துத் தர உள்ளதாக அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார். 

 

தற்போதைய தொழில்நுட்ப வளர்ச்சி காலக்கட்டத்தில் இண்டெர்நெட் அவசியமான ஒன்றாக மாறிவிட்டது. மக்கள் கல்பி, வேலைவாய்ப்பு என பல்வேறு தேவைகளுக்கும் இணையத்தை பயன்படுத்தி வரும் நிலையில், இணைய பயன்பாட்டிற்கான மொபைல் ரீசார்ஜ் கட்டணங்கள் அதிகமாக உள்ளது. தனியார் நிறுவனங்களின் ஃபைபர் இணைய வசதியும் மாதத்திற்கு ஆயிரங்களில் வசூலிக்கப்படுகிறது.

 

இந்நிலையில் மக்கள் வாழ்க்கையில் இணைய தேவை அவசியமாகிவிட்டதை கருத்தில் கொண்டு வீடுகளுக்கு கேபிள் டிவி சேவை வழங்கப்பட்டது போல, குறைந்த கட்டணத்தில் இணைய வசதியை கேபிள்கள் வழியாக ஏற்படுத்தி தர திட்டமிட்டுள்ளதாக அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் இன்று சட்டமன்றத்தில் அறிவித்துள்ளார். 100 Mbps வேகத்தில் மாதம் ரூ.200 கட்டணத்தில் இந்த சேவையை மக்களுக்கு கொண்டு வர உள்ளனர்.

 

அதேபோல, இ-சேவை மையங்கள் மூலமாக மக்கள் பெறும் சேவைகளை, வாட்ஸப் மூலமாகவே விண்ணப்பித்து பெறும் வகையில் ஒருங்கிணைந்த திட்டத்தை செயல்படுத்த உள்ளதாகவும் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.

 

Edit by Prasanth.K

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்