அய்யா.. லவ்வர்ஸ் டேக்கு லாக் டவுன் போடுங்க! – இணையத்தில் வலம் வரும் முதல்வர் போலி வீடியோ!

வெள்ளி, 12 பிப்ரவரி 2021 (15:11 IST)
எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை காதலர் தினம் கொண்டாடப்பட உள்ள நிலையில் முதல்வரிடம் சிலர் லாக்டவுன் போட சொல்வது போன்ற எடிட் செய்யப்பட்ட வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஆண்டுதோறும் பிப்ரவரி 14 அன்று உலகம் முழுவதும் காதலர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நாளில் காதலர்கள் பல இடங்களுக்கு செல்வதும், பரிசுகள் வாங்கி தருவதுமாக கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி வாகனத்தில் செல்லும்போது ஒருவர் லவ்வர்ஸ் டேவுக்கு லாக்டவுன் போடும்படி கேட்பது போலவும், அதற்கு அவர் உங்கள் கோரிக்கை பரிசீலிக்கப்படும் என்று கூறுவது போலவும் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.

ஆனால் கொரோனா ஊரடங்கு காரணமாக தேர்வுக்கு விண்ணப்பித்து எழுதாத கல்லூரி மாணவர்களுக்கு தேர்ச்சி அறிவிக்கப்பட்டது. அந்த சமயம் முதல்வர் சென்றபோது ஒருவர் அரியர் மாணவர்களுக்கு தேர்ச்சி அளிக்க வேண்டுமென்று கோரிக்கை விடுத்தபோது அதற்கு முதல்வர் கோரிக்கையை பரிசீலிப்பதாக கூறியிருந்தார். இந்த வீடியோவை மாறி எடிட் செய்து சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர் முரட்டு சிங்கிள்ஸ் சிலர்..

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்