ஆன்லைன் சூதாட்டத்தில் பணம் இழப்பு ...சிறுவன் தற்கொலை

சனி, 26 செப்டம்பர் 2020 (19:33 IST)
என்ற 14 வயது மகன் இருந்தார். 9-ம் வகுப்பு படிக்கும் சஜன் கொரோனா ஊரடங்கால் பள்ளிகள் திறக்கப்படாத நிலையில்,  தனது தாயார் கீதாவின் செல்போனில் பப்ஜி கேம் விளையாடத் தொடங்கியுள்ளார். பின்னர், கொஞ்சம் கொஞ்சமாக அவர் பப்ஜி கேம் விளையாடியதையும் ஆன்லைன் சூதாட்டத்தில்  பணத்தை வைத்து இழந்துள்ளார்.

இதைப் பெற்றோர் கண்டித்ததால் அவர் தற்கொலை செய்து கொண்டார். இந்தச் சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள கருமன் கூடலில் வசித்து வந்தவர் கீதா. இவரது கணவர் சவுதி அரேபியாவில் வேலை பார்த்து வருகிறார்.

இந்த தம்பதியர்க்கு 14 வயதில் என்ற  மகன் உள்ளார். இவர் தனது தயார் கீதாவின் செல்போனை வாங்கி  பப்ஜி கேம் விளையாடத் தொடங்கியுள்ளார்.பின்னர் ஆன்லை ரம்ப்பி சூதாட்டத்திற்கும்   அவர்  அடிமையாகியுள்ளார்.

இதனை தாய் கண்டித்ததுடன் தனது கணவருக்குப் போன் போட்டு இதுகுறித்து கூறவே அவரும் சஜனைத் திட்டியுள்ளார்.

இதனால் மனமுடைந்த சிறுவன் விஷம் குடித்துத் தற்கொலைக்கு முயன்றான். அவனை மீட்ட அக்கம்பக்கத்தினர்  தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனளிக்கமால் அவர் உயிரிழந்தார்.  இதுகுறித்து போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்