தென் மாவட்டங்களில் வாழ்வதே பெரும் கொடூரம்- நீலம் பண்பாட்டு மையம்

Sinoj

சனி, 20 ஜனவரி 2024 (18:16 IST)
புதுக்கோட்டை மாவட்டத்தில் சாதிய தீண்டாமை வன்கொடுமைகளுக்கு களப் பணியாற்றி வரும் எங்கள் செயல்வீரருக்கும் அவரின் குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் காவல்துறை உரிய பாதுகாப்பு வழங்கிட வேண்டும் என்று நீலம் பண்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.
 
இதுகுறித்து  நீலம் பண்பாட்டு மையம் தெரிவித்துள்ளதாவது:
 
நீலம்பண்பாட்டுமையம் செயல்வீரர் அம்பேத்கர் நகர், பட்டியல் சமூகத்தை சேர்ந்த திரு.முருகானந்தம் (பொறியாளர்) வீட்டு water Proofing வேலை செய்து நிறைவு பெற்று சம்பளம் ரூ.13,500 பணத்தை வாங்கி வீடு திரும்புமும் போது தீடிரென கள்ளர் சமூகத்தைச் சேர்ந்த அடையாளம் தெரியாத கஞ்சா,மது அருந்திய 4 நபர்கள்  அடித்து கொலை முயற்சி செய்தும், குற்றவாளிகள் பணத்தை திருடிச் சென்ற சம்பவத்தை நீலம்பண்பாட்டுமையம் மிக வன்மையாக கண்டிக்கின்றது!
 
அவர் 18.01.2024 அன்று புதுக்கோட்டை நகரம் அம்பேத்கர் நகரிலிருந்து 20 km தொலைவில் உள்ள புதுக்கோட்டை விடுதி என்ற கிராமத்தில் நண்பகல் 3.15 மணிக்கு தனது நிறைவு பெற்ற பணியின் சம்பளம் ரூ13,500 தொகையை பாக்கெட்டில் வைத்து வந்துள்ளனர், அப்பகுதியில் சிறுநீர் கழிக்கும் போது  தீடிரென அடையாளம் தெரியாத கஞ்சா,மது அருந்திய 4 பேர் கொண்ட கும்பல் திரு.முருகானந்தம் அவர்களை எந்த ஊர் என்று கேட்டு மிரட்டி அவரை கீழே தள்ளி அடித்து மொத்த பணத்தையும் திருடி உள்ளனர், தலையில் இரத்த கசிவு ஏற்பட்டுள்ளது என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
 
பணத்தை திருடியவர்கள் கள்ளர் சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
உடனடியாக காவல் நிலையத்திற்கு சென்ற நடந்த பிரச்சினையை எடுத்து கூறிய முருகானந்தம் தற்சமயம் 4 நபர்கள் முருகானந்தம் உடன் வந்த தியாகு என்பவரையும் அடித்துள்ளனர்.
 
தற்போது மூன்றாவது நாளாக திரு.முருகானந்தம் மருத்துவமனையில் சிகிச்சை
பெற்று வருகின்றனர், தியாகுவை வண்டியில் அழைத்து சென்று அடித்துள்ளனர். அவரும் சிகிச்சை பெற்று வீட்டில் ஓய்வு எடுத்து வருகிறார்.
 
நேற்று காவல்துறை முழு வாக்குமூலம் பெற்றுள்ளனர்.4 நபர்களுக்கும் 21 வயது தான் ஆகிறது இந்த வயதில் தான் சாதியவாதிகள் ஒவ்வொரு பகுதியிலும் கஞ்சா ,மது அருந்திய சுற்றி வருகின்றனர்.இது சமூகத்திற்கும் , குடும்பத்திற்கும் ஆபத்தானது.
 
தொடர்ந்து புதுக்கோட்டை மாவட்டத்தில் சாதிய தீண்டாமை வன்கொடுமைகளுக்கு களப் பணியாற்றி வரும் எங்கள் செயல்வீரருக்கும் அவரின் குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் காவல்துறை உரிய பாதுகாப்பு வழங்கிட வேண்டும்.
 
காவல்துறை அதிகாரிகள் விரைந்து கொலை முயற்சி,பணம் திருடிய சாதிய குற்றவாளிகளை உடனடியாக SC_Stவன்கொடுமை_தடுப்புச்சட்டத்தில் கீழ் கைது செய்ய வேண்டும்.
 
அன்பு சகோதரர் முருகானந்தம் விரைந்து முழு குணமடைந்து மீண்டும் சமூக பணிக்கு வர வேண்டும்,நம் அனைவரும் துணை நிற்கிறோம்! என்று தெரிவித்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்